Idhayam Matrimony

ரயிலில் கடத்தப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

வியாழக்கிழமை, 22 மே 2025      தமிழகம்
Train 2023-04-06

Source: provided

சென்னை: ரயிலில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் ரூ.32 லட்சத்தை போலீசார் கைப்பற்றினர்.

ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் புதுவை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹவாலா பணத்தை கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாம்பலம் ரயில் நிலையத்தில், சந்தேகத்தின் பேரில், 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹவாலா பணம் என்பது, பண பரிவர்த்தனையை மறைமுகமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது ஆகும். இது ஒரு சட்டவிரோத பண பரிமாற்ற முறையாகும், இது பொதுவாக பயங்கரவாதம், பணமோசடி போன்ற சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக பெண் உட்பட 3 பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் நகை கடைக்கு பணத்தை கொண்டு செல்ல கடத்தி வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து