முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியை வீழ்த்தி கடைசி அணியாக பிளே ஆப் சுற்றில் நுழைந்தது மும்பை

வியாழக்கிழமை, 22 மே 2025      இந்தியா
Mumbai 2024-04-05

Source: provided

மும்பை: ஐ.பி.எல். போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை  வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக மும்பை, கடைசி அணியாக பிளே ஆபில் நுழைந்தது. டெல்லி வெளியேறியது.

சூர்யகுமார் கலக்கல்...

ஐ.பி.எல். போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை  எதிர்கொண்டது.  முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 5, வில் ஜாக்ஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். 4-ஆவது பேட்டராக சூர்யகுமார் களம் புகுந்து விளாச, தொடக்க வீரர் ரயான் ரிக்கெல்டன் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களுக்கு முடித்துக் கொண்டார். அடுத்து திலக் வர்மா பேட் செய்ய வர, அவருடனான சூர்யகுமாரின் 4-ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 55 ரன்கள் கிடைத்தது.

180 ரன்கள் குவிப்பு...

திலக் வர்மா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 27 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 6-ஆவதாக வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். கடைசியில் நமன் திர் சற்று அதிரடி காட்டினார். ஓவர்கள் முடிவில் சூர்யகுமார் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 73, நமன் திர் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பெளலிங்கில் முகேஷ் குமார் 2, துஷ்மந்தா சமீரா, முஸ்டாஃபிஸுர் ரஹ்மான், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில்   மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது.

சமீர் ரிஸ்வி 39 ரன்கள்...

பின்னர் 181 ரன்களை நோக்கி விளையாடிய டெல்லி அணியில் சமீர் ரிஸ்வி 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருக்க, விப்ராஜ் நிகம் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20, ஆசுதோஷ் சர்மா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்தனர். கே.எல்.ராகுல் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களுக்கு அவுட்டானார், கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ் 6, அபிஷேக் பொரெல் 6, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2, மாதவ் திவாரி 3, குல்தீப் யாதவ் 7, முஸ்டாஃபிஸுர் ரஹ்மான் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனர். மும்பை பவுலிங்கில் மிட்செல் சேன்ட்னர், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தலா 3, டிரென்ட் போல்ட், தீபக் சஹர், வில் ஜாக்ஸ், கரன் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலமாக மும்பை, கடைசி அணியாக பிளே ஆபில் நுழைந்தது. டெல்லி வெளியேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து