எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் (மே 24) முடிவடைகிறது.
தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு பிரிவுகளில் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் குறைந்தபட்ச கல்வித்தகுதியுடன் கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 3,935 பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 25 ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.
விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (மே 24) முடிவடைகிறது. கடைசி நேரத்தில் விண்ணப்பம் செய்யும்போது இணைய பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு ஏற்கெனவே டி.என்.பி.எஸ்.சி. கூறியுள்ளது. எனினும் மே 24(சனிக்கிழமை) நள்ளிரவு 11.59 வரை டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம், விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்ய மே 29 முதல் 31 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


