எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பீகார் : பீகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ள அஹியாபூர் கிராமத்தில் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலையோரத்தில் வைத்திருப்பது தொடர்பாக இரு குழுக்களிடையே சனிக்கிழமை அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியிருக்கிறது. அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.
மேலும் 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மோதலில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 3 பேர் பலியாகினர். இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் வினோத் சிங் மற்றும் வீரேந்திர யாதவ் என இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மற்றொருவரின் அடையாளம் இன்னும் கண்டறியப் படவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றனர். துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பு, இரு குழுக்களும் ஒருவரையொருவர் லத்திகளால் தாக்கிக் கொண்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


