Idhayam Matrimony

அமலாக்கத்துறைக்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்படமாட்டோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சனிக்கிழமை, 24 மே 2025      தமிழகம்
Udhayanidhi 2024-11-11

புதுக்கோட்டை, ஈ.டி.(அமலாக்கத்துறை)க்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்படமாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ. 1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை, டாஸ்மாக் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து, டாஸ்மாக் புகாரில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். அமலாக்கத்துறை சோதனைக்குப் பயந்து தான் முதல்வர் டில்லி சென்று பிரதமரைச் சந்திக்கிறார் என்று பேசப்பட்ட நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு பதிலளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி: முதல்வர் ஸ்டாலின் மாநிலத்தின் நிதி உரிமையைக் கேட்டுப் பெறுவதற்காக டில்லி சென்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதை வைத்து அரசியல் செய்கிறார்.  அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்குப் பயந்து சென்றுள்ளதாக சொல்கிறார்கள். ஈ.டி.(அமலாக்கத்துறை) அல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். இதனைப் பல முறை சொல்லியிருக்கிறோம். தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்போம்.

மிரட்ட முயற்சித்தார்கள். மிரட்டி அடிபணிய வைப்பதற்கு அடிமை கட்சியல்ல தி.மு.க.. முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய கட்சி. சுயமரியாதை கட்சி. பெரியார் கொள்கைகள் கொண்ட கட்சி. தப்பு செய்கிறவர்கள்தான் பயப்பட வேண்டும். நாங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை. யாருக்கும் அடிபணியத் தேவையில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்படி நாங்கள் சந்திப்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து