Idhayam Matrimony

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைது எண்ணிக்கை 76 ஆக உயர்வு

சனிக்கிழமை, 24 மே 2025      இந்தியா
Jail

Source: provided

அசாம் : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை அம்மாநில அரசு கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தற்போது நல்பாரி, சௌத் சல்மரா மற்றும் கம்ரூப் ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அசாமில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளதாக, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானுக்கு ஆதரவாக மற்றும் இந்தியாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை அசாம் காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். இதில், அம்மாநிலத்தின் ஏ.ஐ.டி.யூ.எஃப். கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான அமினுல் இஸ்லாம் என்பவரும் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து