Idhayam Matrimony

குஜராத் அணியை வீழ்த்தி நடப்பு ஐ.பி.எல். தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது சி.எஸ்.கே அணி

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      விளையாட்டு
Dhoni 2024-05-13

Source: provided

அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நடப்பு ஐ.பி.எல். தொடரை நிறைவு செய்துள்ளது.

பிரேவிஸ், கான்வே அசத்தல்...

ஐ.பி.எல். தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவான் கான்வே அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அர்ஷத் கான் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் ஆயுஷ் மாத்ரே 28 ரன்கள் விளாசி அசத்தினார். இருப்பினும், அவர் 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, டெவான் கான்வேவுடன் உர்வில் படேல் ஜோடி சேர்ந்தார்.

உர்வில் படேல் அதிரடி...

இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய உர்வில் படேல் 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஷிவம் துபே 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், கான்வே மற்றும் டிவால்ட் பிரேவிஸ் ஜோடி சேர்ந்தனர். பிரேவிஸ் களமிறங்கியது முதலே அதிரடியில் மிரட்டினார். அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி விளையாடிய டெவான் கான்வே 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

231 ரன்கள் இலக்கு... 

மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய டிவால்ட் பிரேவிஸும் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 23 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஜடேஜா 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.  இறுதியில் சென்னை அணி 230 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாய் கிஷோர், ரஷித் கான் மற்றும் ஷாருக்கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

சி.எஸ்.கே. அபார வெற்றி...

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 147 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி நடப்பு ஐ.பி.எல். தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து