எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : 4 நாடுகள் மகளிர் ஆக்கி தொடரில் சிலியை 2-1 புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
மகளிர் உலக கோப்பை...
ஜூனியர் மகளிர் உலக கோப்பைக்கான ஆக்கி போட்டிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளன. இதற்கு தயாராகும் வகையில், இந்திய மகளிர் அணி, 4 நாடுகளுக்கான ஆக்கி போட்டி தொடரில் விளையாடுகிறது. அர்ஜெண்டினா, உருகுவே, சிலி மற்றும் இந்தியா ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் நேற்று தொடங்கி ஜூன் 2-ந்தேதி வரை நடைபெறும்.
சிலி முன்னிலை...
இந்நிலையில், அர்ஜெண்டினாவின் ரொசாரியோ நகரில் நடந்த போட்டி ஒன்றில், இந்தியா மற்றும் சிலி நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடின. இதில், போட்டியின் 20-வது நிமிடத்தில் கோல் அடித்து, வீராங்கனை ஜாவேரியா சாயின்ஸ் சிலி அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
இந்திய அணி அபாரம்...
எனினும், 39-வது நிமிடத்தில் இந்தியாவின் சுக்வீர் கவுர் கோல் அடித்து அதனை சமன்படுத்தினார். போட்டியின் வெற்றியை முடிவு செய்யும் கடைசி நிமிடங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இந்திய வீராங்கனை கனிகா சிவாச் போட்டியின் 58-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.
உருகுவேக்கு எதிராக...
இதனால், சிலியை 2-1 புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. அடுத்து உருகுவே அணிக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா விளையாடும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


