Idhayam Matrimony

வரும் 11-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் சேலம் மாவட்டம் பயணம்

திங்கட்கிழமை, 26 மே 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சேலம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து அரசின் திட்டங்களை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதேபோல் சேலம் மாவட்டத்திலும் வருகிற 12ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ம் தேதி சேலம் வருகிறார்.

இதற்காக சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று சேலம் மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 11-ம் தேதி சேலம் வருகிறார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மேட்டூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களையும், கட்சியினரையும் சந்திக்கிறார். தொடர்ந்து இரவு மேட்டூரில் தங்குகிறார்.

தொடர்ந்து மறுநாள் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று 1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1200 கோடி மதிப்பிலான நல உதவிகளை வழங்கி பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து