எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : ரஷ்யா அதிபர் புதின் பைத்தியம்போல் செயல்படுகிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் நேற்று 1 ஆயிரத்து 187-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவும், உக்ரைனும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால் போர் நீடித்து வருகிறது.
இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா நேற்றுமுன்தினம் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 266 டிரோன்கள், 45 ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்ய அதிபர் புதினை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நான் நல்ல உறவில் இருந்து வருகிறேன். ஆனால், புதினுக்கு எதே நடந்துவிட்டது. அவர் பைத்தியம்போல் செயல்படுகிறார். எந்தவித தேவையும் நேற்று பொதுமக்கள் பலரை புதின் கொல்கிறார். காரணமின்றி உக்ரைன் நகரங்கள் மீது டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்த உக்ரைனையும் அடைய புதின் முயற்சித்தால் அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்' என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


