Idhayam Matrimony

கடலூரில் விளையாட்டுத் திடலை பலாப்பழ மையமாக மாற்ற தடை

திங்கட்கிழமை, 26 மே 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

சென்னை, கடலூரில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான விளையாட்டு திடலை, பலாப்பழ மதிப்பு கூட்டு மையமாக மாற்றுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த ஜி.ராஜலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடலுார் மாவட்டம், சி.என்.பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பட்டீஸ்வரம் கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் ‘மலை திடல்’ என அழைக்கப்படும் பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இந்த விளையாட்டு மைதானத்தை, பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்களிடம் எவ்வித கருத்து கேட்புக் கூட்டமும் நடத்தாமல், கடலூர் மாவட்ட ஆட்சியர், பலாப்பழ மதிப்பு கூட்டு மையம் கட்டுவதற்கான அனுமதி வழங்கி, கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, மறு வகைப்படுத்தும் அதிகாரம் இல்லை என, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுப்படுத்தி உள்ளது. எனவே, விளையாட்டு மைதானம் உள்ள நிலத்தில், பலாப்பழ மதிப்பு கூட்டும் மையம் கட்டும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்,” என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “கடந்த 200 ஆண்டுகளாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்த பகுதியில் எவ்வித கட்டுமானமும் கட்ட அனுமதிக்கக்கூடாது. கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்,” என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடலூரில் பலாப்பழ மதிப்புக்கூட்டு மையம் அமைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து