எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தலால் நாடு முன்னேற்ற பாதையில் பயணிக்கும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்தார்.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற "ஒரே நாடு ஒரே தேர்தல்" குறித்த கருத்தரங்கில் ஜனசேனா கட்சித் தலைவரும் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த கருத்தரங்கில் பேசிய பவன் கல்யாண் கூறியதாவது:- தனித்தனியாக தேர்தல் நடத்துவதினால் இந்தியா மிகப்பெரிய பொருட்செலவுகளை சந்தித்து வருகிறது. தேர்தல்களினால் அதிகாரிகள், காவலர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வேலை செய்யும் நிலை உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலால் நாடு முன்னேற்ற பாதையில் பயணிக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் தேர்தல் செலவுகளை வெகுவாக குறைக்க முடியும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பல பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி. நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆதரித்து கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். கருணாநிதி ஆதரித்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஸ்டாலின் எதிர்ப்பது விந்தையாக உள்ளது.
'மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்' என எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் வாக்கு இயந்திரத்தை ஆதரித்து பேசுவார்கள். எதிர்க்கட்சிகள் தோற்றால் வாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


