எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லியூப்லியானா, பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா எங்களுடன் நிற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சர்வதேச நாடுகளுக்கு விளக்குவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன.
அதில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் ஒரு எம்.பி.க்கள் குழுவினர் ஸ்லோவேனியாவிற்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஸ்லோவேனியா தலைநகர் லியூப்லியானாவுக்கு சென்ற கனிமொழி தலைமையிலான குழு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி ஸ்லோவேனியா நாட்டு அரசு பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தனர்.
மேலும், ஸ்லோவேனியா நாடாளுமன்ற வெளிநாட்டுக் கொள்கை குழுத் தலைவரான பிரெட்ராக் பாகோவிச் மற்றும் இந்தியா–ஸ்லோவேனியா பாராளுமன்ற நட்புறவு குழுவின் உறுப்பினர் மிரோஸ்லாவ் கிரெகோரிச் ஆகியோரை எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி, ஸ்லோவேனியா நாடு மிகவும் வலுவான ஆதரவாளராக உள்ளனர். அவர்கள் எப்போதும் அமைதியை ஆதரித்து வருகின்றனர், மேலும் பயங்கரவாத செயல்களுக்கு எதிராக எப்போதும் நிற்கிறார்கள். உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா எங்களுடன் நிற்கும் என்ற நேர்மறையான உணர்வுடன் நாங்கள் திரும்பிச் செல்கிறோம். மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) இந்தியா எதிர்பார்ப்புகளைப் பற்றிய விவாதங்கள் நடைபெறும் போது, அவர்கள் இந்தியாவுடன் நிற்பார்கள் என்பதிலும் நம்பிக்கை இருக்கிறது என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


