எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : டெல்லியில் போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், டெல்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, தென்மேற்கு டெல்லியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்தனர். அவர்களது ஆவணங்களை போலீசார் சரி பார்த்தனர். அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் சிலர் இந்தியா- வங்கதேச எல்லையில் உள்ள ஆறுகளைக் கடந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை ஒப்புக்கொண்டனர் என போலீசார் தெரிவித்தனர். கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை டெல்லியில் சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


