Idhayam Matrimony

வினாத்தாள் கசிவு..? மனோன்மணியம் பல்கலை. தேர்வு திடீர் ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      தமிழகம்
Manonmaniam-university-2025

நெல்லை, மனோன்மணியம் பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளிலும் இண்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் முக்கியமான பல்கலைக் கழகமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி, குமரி, தூத்துகுடி உள்பட பல மாவட்டங்களில் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று "இன்டஸ்ட்ரியல் லா" என்ற பாடத்திற்கான தேர்வு நடைபெற இருந்தது. மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வந்தனர். இந்த நிலையில் நேற்று  திடீரென "இன்டஸ்ட்ரியல் லா" பாடத் தேர்வு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மனோன்மணியம் பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளிலும் இண்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிந்ததால் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இன்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வுக்காக கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை திரும்ப பெறும் பணி நடந்து வருகிறது. மேலும் எப்படி இந்த வினாத்தாள் கசிந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்வுக்கு மாணவ மாணவிகள் தயாராகி வந்த நிலையில் கடைசி நேரத்தில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து