எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கடப்பா : நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூ. 500 நோட்டுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சியின் 3 நாள்கள் மாநாடு நேற்று தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினார்.
தொடர்ந்து பேசும்போது, "பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பழைய ரூ.500, ரூ. 1,000 நோட்டுகளை திரும்பப் பெற்று புதிய ரூ. 2,000 நோட்டுகளை கொண்டுவந்துள்ளீர்கள். தேவைப்பட்டால் அதிக மதிப்பிலான அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும். பதிலாக டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துங்கள், இதனால் கறுப்புப் பணத்தை ஒழிக்கலாம்" என்று பிரதமரிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
மேலும், "இந்த மாநாட்டிலும் மீண்டும் இதையே வலியுறுத்துகிறேன். ரூ. 500 நோட்டுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பதிலாக, பல நாடுகளில் டிஜிட்டல் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. அதனால் இந்தியாவிலும் அதனை ஊக்குவிக்க வேண்டும். கட்சி நிதிகளை ஆன்லைன் மூலமாக டிஜிட்டல் வடிவில் அனுப்ப வேண்டும்" என்று பேசினார்.
தொடர்ந்து, தேர்தலில் வாக்குக்காக மக்களுக்கு பணம் வழங்க வேண்டிய தேவையில்லை, மக்களுக்கு சேவை செய்யும்போது அவர்களுடைய வாக்குகள் தானாகவே கிடைக்கும் என்றும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


