எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பி.சி.சி.ஐ. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டத்தில்...
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐ.பி.எல். 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. லக்னோவில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
தளபதிகளுக்கு அழைப்பு...
ஐ.பி.எல். இறுதிப்போட்டி வருகிற ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறவுள்ள நிலையில், இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக முப்படை தளபதிகளுக்கு பி.சி.சி.ஐ. அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. செயலர் தேவ்ஜித் சாய்கியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இந்திய ஆயுதப் படைகளின் தளபதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு அகமதாபாதில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஆயுதப் படைகளின் வீரம், தைரியம் மற்றும் தன்னலமற்ற சேவைக்கு பி.சி.சி.ஐ. சல்யூட் செய்கிறது.
கௌரவிப்பு...
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஐ.பி.எல். நிறைவு விழாவில், நமது ஹீரோக்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். நாட்டில் கிரிக்கெட் அதீதமாக நேசிக்கப்பட்டாலும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பைவிட வேறு எந்த ஒரு விஷயமும் பெரிதல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்...
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது. அதில், பல்வேறு பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் சார்பில் தாக்குதலை நிறுத்த வேண்டுகோள் வைக்கப்பட்டதையடுத்து, தாக்குதலை கைவிட இந்தியா ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


