முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப்புக்கு எதிரான தோல்வி: மும்பை கேப்டன் ஹர்திக் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      விளையாட்டு
Hardick-pandya

Source: provided

ஜெய்ப்பூர் : பஞ்சாப்புக்கு எதிரான தோல்விக்கான காரணம் குறித்து  ஹர்திக் பாண்ட்யா விளக்கமளித்துள்ளார்.

பஞ்சாப் வெற்றி...

ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சென், விஜய்குமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

20 ரன்கள் குறைவு...

இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது, நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இப்படி நடப்பது சகஜம். நல்ல கிரிக்கெட்டை விளையாடி வரும் நாங்கள் இன்று (நேற்று முன்தினம்) நன்றாக விளையாடவில்லை. அதுவே தோல்வியைக் கொடுத்தது. மும்பை 5 கோப்பைகளை வென்ற அணி.

தெளிவாக இல்லை...

ஆக்சலேரேட்டரில் நீங்கள் கொஞ்சம் காலை எடுத்தாலும் மற்ற அணிகள் வெற்றிகளை எடுத்துச் சென்று விடும். இங்கே என்னுடைய மெசேஜ் எளிது. அதாவது இந்த சிறிய சரிவில் பாடத்தைக் கற்றுக்கொண்டு நாக் அவுட் போட்டியை நோக்கி முன்னேற வேண்டும். எங்களுடைய பேட்டிங் துறை இன்னும் 20 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். கரண் சர்மாவை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தாதது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நாங்கள் அஸ்வனி குமாருக்கு ஆதரவு கொடுத்தோம். இன்னிங்ஸ்களுக்கு இடையே பிட்ச்சில் பெரிய மாற்றம் இருந்ததாக தெரியவில்லை. எங்களுடைய பவுலிங் தெளிவாக இல்லை. எதிரணி நன்றாக விளையாடினார்கள்.

எதிர்நோக்குகிறோம்...

எலிமினேட்டரில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். பேட்டிங் குழுவில் சரியான டெம்ப்ளேட்டை கண்டறிய வேண்டும். அதிகம் பதற்றமடையாத எங்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பது தெரியும். எலிமினேட்டரை எதிர்நோக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து