Idhayam Matrimony

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு அமலானது

புதன்கிழமை, 28 மே 2025      தமிழகம்
Pudhucherry-2023-03-23

புதுச்சேரி, புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான மதுவகைகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மதுப்பிரியர்கள் அதிக அளவில் புதுவைக்கு வந்து மது பானத்தை விரும்பி அருந்துகின்றனர். இதனால் புதுவை அரசின் வருவாயில் மது விற்பனை முக்கிய இடம் பிடித்துள்ளது. புதுவையில் அரசு மற்றும் தனியார் மூலம் ஏராளமான மது விற்பனை கடைகள் உள்ளன. மதுபானங்களுக்கு விற்பனை வரிக்கு பதிலாக காலால் வரி, கூடுதல் கலால்வரி, இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

இந்தநிலையில் புதுச்சேரியில் பிராந்தி, விஸ்கி, ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் விலை லிட்டருக்கு ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்தப்பட்டுள்ளது. பீர் வகைகள் ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது. இதன்படி மதுபானங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக புதுச்சேரி கலால் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து