எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை, : அ.தி.மு.க. சார்பில் போட்டியிடவுள்ள மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து கட்சியின் நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடையும் நிலையில், காலியாகும் அந்த ஆறு இடங்களுக்கு தேர்தலை அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி, வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு.க தரப்பில், வழக்கறிஞர் வில்சன், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட்டை ஒதுக்கப்பட்டுள்ளது..
இதற்கிடையே மாநிலங்களவை எம்.பி தேர்தலுக்கான வேலைகளில் தி.மு.க தரப்பு மும்முரம் காட்டி வரும் நிலையில், இன்றும், நாளையும் (மே 29,30-ல்) நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவிருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கவிருக்கிறார். "ஜூன் 2-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவிருப்பதால், இந்தக் கூட்டத்தின் முடிவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


