Idhayam Matrimony

கடந்த 6 நாட்களில் மட்டும் பெரியாறு அணையின் நீர்மட்டம் 11 அடி உயர்வு

வியாழக்கிழமை, 29 மே 2025      தமிழகம்
Periyar-Dam 2024-12-13

கூடலூர், கடந்த 6 நாட்களில் மட்டும் பெரியாறு அணையின் நீர்மட்டம் 11 அடி உயர்ந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கேரளாவில் 10 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந்தேதி 114 கன அடியாக இருந்த நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நேற்று காலை 124.75 அடியாக உள்ளது.

அணைக்கு நேற்றுமுன்தினம் காலை 7735 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 7319 கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்தபோதும் தமிழக பகுதிக்கு 100 கன அடி மட்டுமே திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 3569 மி.கன அடியாக உள்ளது. பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 11 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து