Idhayam Matrimony

யு.பி.எஸ்.சி. தேர்வு - ஹால்டிகெட் வெளியீடு

வியாழக்கிழமை, 29 மே 2025      இந்தியா
UPSC 2023-05-23

Source: provided

புதுடெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) 2025 பொறியியல் (முதற்கட்ட) தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் நடத்துகிறது. இதற்காக தேர்வர்கள் பதிவு செய்யவும், விண்ணப்பிக்கவும் புதிய இணையதளத்தை யு.பி.எஸ்.சி. நேற்று முன்தினம் தொடங்கியது.

அதன்படி https://upsconline.nic.in எனப்படும் இந்த புதிய இணையதளம் மூலம்தான் இனிமேல் மேற்படி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் பழைய ஒருமுறை பதிவு முறை இனிமேல் செல்லுபடியாகாது. புதிய இணையதளம் மூலம் தேர்வர்கள் நேரம் சேமிப்பு, கடைசி நேர நெருக்கடிகள் இன்றி யு.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு எளிமையாக விண்ணப்பிக்க முடியும் என யு.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) 2025 பொறியியல் (முதற்கட்ட) தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான upsc.gov.in மற்றும் upsconline.gov.in இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்வு ஜூன் 8ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து