எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விழுப்புரம்: அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தேவைப்பட்டால் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியை விட்டே நீக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று (மே.29) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அன்புமணியை அவரது 35 வயதில் நான் அமைச்சராக்கினேன். நான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது எனது தவறு.
தருமபுரியில் நடந்த கூட்டமொன்றில் அன்புமணி பேசியதை பார்த்திருப்பீர்கள், நானும் கேட்டேன். அந்தப் பேச்சில், “நான் என்ன தவறு செய்தேன், ஏன் பதவி நீக்கம் என்று.” அன்புமணி கேட்டிருந்தார். அது கட்சிக்காரர்களையும் மக்களையும் திசை திருப்பும் முயற்சி. என்னைக் குற்றவாளியாக்கி அன்புமணி அனுதாபம் தேட முயற்சித்துள்ளார்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு பயணித்தக் கட்சியில் அவர் கலகத்தை உண்டாக்கினார். வளர்த்த கிடா மார்பில் பாய்ந்துள்ளது. கட்சி வளர்ச்சிக்கு தடையாக இருந்து பல இன்னல்களைச் செய்தவர் அன்புமணி. பா.ம.க. என்னும் ஆளுயுர கண்ணாடியை நொடியில் உடைத்தது யார்? குருவை, அன்புமணி கீழ்த்தரமாக நடத்தினார். பெற்ற தாயை பாட்டிலை வீசித்தாக்க முயன்றவர் அன்புமணி. பா.ம.க.வை வளர்த்தது யார்? கூசாமல் பொய் சொல்பவர் அன்புமணி. நான் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என்று 108 பேருக்கு அவரே கூறியுள்ளார்.
2024 தேர்தலின் போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டுமென்று அமைத்தார் அன்புமணி. நான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறினேன். அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் இயல்பான கூட்டணி. 2024-ல் இந்தக் கூட்டணி அமைந்திருந்தால் பா.ம.க. - 3 இடங்களிலும், அ.தி.மு.க.வும் 6, 7 இடங்களிலும் வென்றிருக்கும். பா.ஜ.க. கூட்டணிக்காக அன்புமணியும், சவுமியாவும் என் கால்களைப் பிடித்து அழுதனர். அந்தக் கூட்டணிக்கான ஏற்பாட்டை சவுமியா செய்தார். தேவைப்பட்டால் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


