Idhayam Matrimony

சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்க நீண்ட காலமாக தி.மு.க. தயங்கியது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      தமிழகம்
eps

Source: provided

சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்க தி.மு.க. ஏன் நீண்ட காலமாக தயங்கியது  என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு அண்மையில், விரிவான விதத்தில் சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.   2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் நான் முதல்வராக இருந்த நேரத்தில், சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்த சொன்ன முதல் அரசுகளில் எங்களது அரசும் ஒன்று.  69 சதவிகித இடஒதுக்கீடு கொள்கை மூலம் நீண்டகாலமாக கலங்கரை விளக்கம் போல உறுதியான செயல்பாட்டுடன் விளங்கிய கட்சி அதி.மு.க..  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இடைவிடாத, விடாப்பிடியான, தொடர்ச்சியான வற்புறுத்தல் காரணமாக தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு சட்டம், அரசியல் அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் இடம்பெற்றது.   சாதி ரீதியான கணக்கெடுப்பு குறித்து ஆரம்பகட்டத்தில் நாங்கள் பேசிய காலத்தில், ஆளும் தி.மு.க. அமைதியாக, மவுனமாக இருந்தது. ஆனால் இப்போது அதே கட்சி, சாதி வாரி கணக்கெடுப்பில் தங்களை ஏதோ முன்னணி வழிகாட்டிகள், ஒளிகாட்டிகள் போல பேசிக் கொள்கிறார்கள்.

2023-ம் ஆண்டின் பிற்பகுதியில் தான் தி.மு.க. முதல்வர் இதுபற்றி பிரதமருக்குக் கடிதம் எழுதினார். நாங்கள் ஏற்கெனவே பேசி வந்த விஷயத்தைத்தான் அவர் எதிரொலித்தார்.  இப்போதும் கூட தி.மு.க.வின் நடவடிக்கைகள் முன்னோடி நடவடிக்கையாக, வழிகாட்டும் நடவடிக்கைகள் போலத் தெரியவில்லை . 

சாதி வாரி கணக்கெடுப்பை ஆதரிக்க தி.மு.க. ஏன் நீண்ட காலமாகத் தயங்கியது? ஒருவர் இந்த கேள்வியைக் கேட்கலாம். தேர்தல் கணக்குகளில் இதற்கான பதில் ஒளிந்திருக்கிறது. ஒளிவுமறைவற்ற தெள்ளத்தெளிவான ஒரு சாதிய கணக்கெடுப்பு சாதி ரீதியான கூட்டணிகளைப் பாதிக்கலாம். அதற்கு தொல்லை தரலாம். சாதி ரீதியான கூட்டணிகளை தி.மு.க. நீண்டகாலமாக கவனமாகக் கட்டமைத்து வருகிறது. இதற்கு நேர் எதிராக அதி.மு.க. வசதியான கற்பனைகள், கற்பிதங்களை விட சங்கடம் தருகிற உண்மைகளை நம்புவதே நல்லது என்ற கருதுகிறது. எங்களைப் பொறுத்தவரை நீதி என்பது எப்போதும் உறுதியாக நிலைநாட்டப்படுவதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் சலனப்படாமல் நிற்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து