Idhayam Matrimony

குமரியில் வீசிய கடும் சூறைக்காற்று: மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் சேதம்

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      தமிழகம்
Puyal 2024-07-09

Source: provided

நாகர்கோவில், : குமரி மாவட்டம் முழுவதும் வீசிய சூறை காற்றிற்கு 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது.  

 குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடற்கரை கிராமங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று  மழை பெய்து கொண்டே இருந்தது. சூறைக்காற்றும் வீசியது. சூறை காற்றிற்கு கடற்கரை கிராமங்களில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. நாகர்கோவில் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்தது. மீனாட்சிபுரம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதலே மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இறச்சகுளம், நாவல்காடு, ஆசாரிப்பள்ளம், ஈத்தாமொழி பகுதிகளிலும் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததில் மின்வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கியது. நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சரிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர்.

சாமிதோப்பு பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் வீசிய சூறை காற்றிற்கு 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து