Idhayam Matrimony

நிறைய விஷயங்களை தேடி கற்றுக்கொண்டவர் ராஜேஷ்: நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

சனிக்கிழமை, 31 மே 2025      தமிழகம்
Rajini-2025-05-31

சென்னை, வாழ்நாள் முழுவதும் நிறைய விஷயங்களை தேடி தேடி கற்றுக் கொண்டவர் ராஜேஷ் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். சமீபகாலமாக உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். இந்தநிலையில் 3 நாட்களுக்கு முன் காலை அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை அருகேயுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 75.

மரணம் அடைந்த நடிகர் ராஜேசின் உடல், ராமாபுரம் கோத்தாரிநகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அன்றைய தினமே,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜேஷ் உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:- நடிகர் ராஜேஷ் நல்ல மனிதர்; திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. ராஜேஷ் என்னுடைய நெருங்கிய நண்பர். சினிமா, அரசியல் ஆன்மிகம் என அனைத்தும் தெரிந்தவர். ராஜேஷ் தன் வாழ்நாள் முழுவதும் நிறைய விஷயங்களை தேடி தேடி கற்றுக்கொண்டார். என்னை அடிக்கடி சந்தித்து ஆரோக்கியமாக இருக்க யோசனைகளை கூறுவார். ராஜேஷ் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பு" என்று கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து