Idhayam Matrimony

ஒரே போட்டியில் ரோகித் 3 சாதனைகள்

சனிக்கிழமை, 31 மே 2025      விளையாட்டு
Rohit-Kohli-Bumra 2024-07-1

Source: provided

முல்லான்பூர் : ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

மும்பை வெற்றி...

’எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை நேற்று முன்தினம் இரவு வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

ரோகித் சாதனை...

ரோகித் சர்மா இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் 3 புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த சீசனில் ஏற்ற இறக்கங்களோடு விளையாடிய இவரை ரசிகர்கள் ஹிட் மேன் என ஏன் அழைக்கிறார் என இந்தப் போட்டியில் நிரூபித்து காட்டினார். இந்த வெற்றியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் ‘குவாலிஃபயா் 2’-வில் பஞ்சாப் கிங்ஸை சந்திக்கிறது.

7,000 ரன்கள்...

ஐ.பி.எல். தொடரில் 266 இன்னிங்ஸில் விளையாடி 7,038 ரன்களை குவித்துள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் இதுதான் 2-ஆவது அதிகபட்ச ரன்களாகும். முதலிடத்தில் கோலி 8,618 ரன்களுடன் இருக்கிறார்.

அதிக ஆட்ட நாயகன் விருது...

ஐ.பி.எல். வரலாற்றில் அதிகபட்ச ஆட்ட நாயகன் விருது வாங்கியவர்களில் 3-ஆம் இடம் பிடித்துள்ளார். இந்தியர்கள் வரிசையில் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளார். எபிடி வில்லியர்ஸ் - 25, கிறிஸ் கெயில் - 22, ரோகித் சர்மா - 21, விராட் கோலி - 19. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் (302)அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 357 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெயில் முதலிடத்தில் இருக்கிறார்.

300 சிக்ஸர்கள்

1) கெயில் - 357.

2) ரோகித் - 302.

3) கோலி - 291. 

4) தோனி - 264.

5) ஏபிடி - 251.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து