Idhayam Matrimony

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2025      தமிழகம்
Mettur-Power 2025-06-01

Source: provided

மேட்டூர் :  மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த 3 அலகுகளில்,  மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேட்டூர், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோடை காலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும்போது, அனல் மின் நிலையங்கள், முழு திறனுடன் மின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை மற்றும், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக மின் பயன்பாடு குறைந்து காணப்பட்டது.

 இதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 2 பிரிவுகளில்  820 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில், 12 நாட்களாக 3 பிரிவுகளில் மின் உற்பத்தி நடக்கவில்லை. தற்போது, நிறுத்தப்பட்டிருந்த 3 பிரிவுகளிலும் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனல்மின் நிலைய அதிகாரிகள் கூறியதாவது, ''தமிழகத்தில் கோடை மழையின் தாக்கத்தால் பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்தததால் வீடுகள், அலுவலகங்களுக்கான மின்சார பயன்பாடும் சற்று குறைந்தது.  இதன் காரணமாக அனல் மின் நிலையங்களில் மின்னுற்பத்தி குறைக்கப்பட்டது. தற்போது, வெயில் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் உள்ள தலா 210 மெகாவாட் கொண்ட 4 அலகுகள், 600 மெகாவாட் கொண்ட 2-வது பிரிவு என அனைத்திலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.” என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து