எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் சுப்மன் கில்லுக்கான மிகப் பெரிய வாய்ப்பு என முன்னாள் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
சுற்றுப்பயணம்...
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட மிக முக்கியமான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ரிஷப் பந்த் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் என்பதால், இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பும், சுப்மன் கில் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கில்லுக்கான வாய்ப்பு...
டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அவருக்கான தேர்வு என முன்னாள் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் கேப்டன் சுப்மன் கில்லுக்கான தேர்வு. அந்த தேர்வுக்கு அவர் தயாராக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒரு வீரராகவும் அவர் சிறப்பாக செயல்படுவதற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
வளர்ச்சியடையும்...
அவரால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடிந்தால், அவரது கேப்டன்சி தானாக வளர்ச்சியடையும். இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து சிறந்த முடிவை எதிர்பார்க்கிறேன். போட்டிகள் மிகவும் கடுமையாக இருக்கும். இந்திய அணி அதற்கு தயாராக இருக்கிறது என நினைக்கிறேன் என்றார். இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


