எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
183 விக்கெட்டுகள்...
கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தால் மகிழ்ச்சியில் கொண்டாடுவார்கள். சுனில் நரைன் மாதிரி சிலரே அமைதியாக இருப்பார்கள். சுனில் நரைன் வரிசையில் ஜஸ்பிரீத் பும்ராவும் இருக்கிறார். பெரும்பாலான போட்டிகளில் பும்ரா அமைதியாக சிரித்து கடந்துவிடுவார். சில போட்டிகளில் முறைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸுக்காக ஐ.பி.எல். தொடரில் விளையாடும் பும்ரா 144 போட்டிகளில் 183 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ஒத்துவரவில்லை...
ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பும்ரா பேசியதாவது: நானும் சவாலான போட்டி விளையாடி வெல்ல நினைக்கிறேன். ஆனால், அந்த எல்லையை தாண்டாமல் விளையாட நினைக்கிறேன். அனைவரும் வித்தியாசமாக விளையாடுவார்கள். தொடக்கத்தில் எனக்கு பயிற்சியாளர்கள் இல்லாததால் தொலைக்காட்சி பார்த்து தான் கற்றுக்கொண்டேன். வார்த்தைகள், உடல் ரீதியாக எதிரணியை காயப்படுத்தும் பந்துவீச்சாளர்களை போலவே நானும் சிலமுறை முயற்சித்து இருக்கிறேன். எனக்கு அது ஒத்துவரவில்லை.
கோமாளியாக...
கோபமடைந்தால் சரியாக பந்துவீச முடியாது. அதனால், எனது கோபத்தைக் கட்டுப்படுத்தி பந்துவீச்சில் கவனம் செலுத்தினேன். நமது சிறந்த செயல்பாடுகளை அளிக்க வேண்டும்தான். ஆனால், அதற்காக ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை எனக் கூறினார்.
கோலி ரசிகர்கள் அதிருப்தி...
பும்ரா யாரையும் குறிப்பிட்டு இதைச் சொல்லாவிட்டாலும் விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இது குறித்து அதிருப்தி அடைந்துள்ளார்கள். ஆஸி. ஊடகங்கள் கோலியை ’கோமாளி கோலி’ என பிஜிடி தொடரின் போது குறிப்பிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


