Idhayam Matrimony

சமாஜ்வாடி எம்.பி.யை மணக்கிறார் ரிங்கு சிங்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2025      விளையாட்டு
Ringu-Singh 2023-12-19

Source: provided

லக்னோ : இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கும் சமாஜ்வாடி எம்.பி. பிரியா சரோஜுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

இளம் வீரர்... 

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இளம் வீரர் ரிங்கு சிங் உருவெடுத்து வருகிறார். இந்திய அணிக்காக அவர் 2 ஒருநாள் மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரராக அவர் வலம் வருகிறார்.

வாராணசியில்...

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங்குக்கும் சமாஜ்வாடி எம்.பி. பிரியா சரோஜுக்கும் வருகிற ஜூன் 8-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பிரியா சரோஜின் தந்தை டூபானி சரோஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரின் திருமணம் பராம்பரிய முறைப்படி வாராணசியில் உள்ள ஹோட்டல் தாஜில் இந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவர்களது திருமணத்துக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல் முறை எம்.பி...

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் இருவரின் நிச்சயதார்த்தத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் மட்டும் கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. 26 வயதாகும் பிரியா சரோஜ் சமாஜ்வாடி சார்பில் ஜான்பூரின் மச்சிலிசார் தொகுதிக்கு முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவரது தந்தை டூஃபானி சரோஜ் சமாஜ்வாடி கட்சியில் இரண்டு முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

குடும்ப நண்பர்களாக...

பிரியா சரோஜின் தந்தையின் நண்பரும், முன்னாள் கிரிக்கெட்டருமான ஒருவரின் மூலம் ரிங்கு சிங்குக்கு பிரியா சரோஜ் அறிமுகமாகியிருக்கிறார். அதன் பின், ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் இருவரும் கடந்த சில காலமாக நண்பர்களாக பழகி வந்ததுள்ளனர். பின்னர், அவர்களது நட்பு குடும்பத்தினரின் சம்மதத்துடனும் இந்த திருமண ஏற்பாடாக மாறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து