எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூயார்க் : நான் எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை. நான் போதைப் பொருளை பயன்படுத்தியதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது கெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், இதில் அவருக்கு சிறுநீர்ப்பை பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, நான் எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை. நான் போதைப் பொருளை பயன்படுத்தியதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது. மருத்துவர் பரிந்துரையின் பேரில், மன அழுத்தத்தில் இருந்து வெளியேறுவதற்காக, கெட்டமைனை சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தினேன்.
அதை ஏற்கனவே எக்ஸ் தளத்தில் கூறி உள்ளேன். தற்போது அதையும் நான் பயன்படுத்துவது கிடையாது என்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக எலான் மஸ்க்கை நியமித்திருந்தார். அந்த பதவியில் இருந்து சமீபத்தில் எலான் மஸ்க் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


