எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கீவ், ரஷ்யா ராஜதந்திரத்துடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா, ராணுவ நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியது. ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற சமாதான முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. எனினும், அமைதிக்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ஜெலென்ஸ்கி கூறுகையில், " அமைதியை ஏற்பத்துவதற்கான தனது திட்டத்தை ரஷ்யா இதுவரை யாருடனும் பகிர்ந்துகொள்ளவில்லை. இருந்த போதிலும், அமைதியை நோக்கிய பாதையில் குறைந்தபட்சம் சில முன்னேற்றங்களை அடைய நாங்கள் முயற்சிப்போம். ரஷ்யா, ராஜதந்திரத்துடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைன் ராணுவம் ரஷ்யா மீது ஞாயிற்றுக்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


