Idhayam Matrimony

சார் என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தினாரா? நீதிபதி விளக்கம்

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      தமிழகம்
Chennai-high-court2

சென்னை, , 'சார்' என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தினாரா? என்பதற்கு நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தநிலையில், 'சார்' என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தினாரா? என்பதற்கு விசாரணையின் போது போலீசார் அளித்த ஆதாரங்கள் மூலம் நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

ஞானசேகரனிடம் அண்ணா பல்கலைக்கழக மாணவி சிக்கிய நேரத்தில், அவர் யாரோ ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு 'சார்' என குறிப்பிட்டு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த சார் யார்? என்ற கேள்வி தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. இது, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகவும் நீதிமன்றத்தில் விவாதம் நடந்தது.

ஞானசேகரன் 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்தினாரா? என்பது குறித்து நீதிபதி தனது தீர்ப்பில், 'ஞானசேகரன், தன்னிடம் சிக்கிய மாணவியிடம் தான் பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றும் நோக்கத்திலும், மாணவியை திசைதிருப்பி மிரட்டவும் 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பது அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் நேரடி சாட்சிகள் மூலமாகவும் தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்ற அரசு தரப்பு வாதத்தை இந்நீதிமன்றம் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறது' எனக்கூறி உள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து