எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சாட்டன், சிக்கிம் ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 வீரர்களை காணவில்லை. அவர்களை தேடி வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வடக்கு சிக்கிமில் உள்ள சாட்டன் எனும் பகுதியில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. நேற்று மாலை அங்கு பெய்த கனமழை காரணமாக, பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில், சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 ராணுவ வீரர்களை காணவில்லை. அவர்களை தேடி வருகின்றனர்.
இது குறித்து ராணுவம் தரப்பில் கூறியதாவது; இதுவரையில் நிலச்சரிவில் சிக்கிய 3 ராணுவ வீரர்களின் உடல் எடுக்கப்பட்டுள்ளது. சிறு காயங்களுடன் 4 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சாவாலான வானிலையிலும், மாயமான 6 ராணுவ வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


