எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜகார்த்தா : இந்தோனசியாவில் ஏற்பட்ட கல் குவாரி விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புபணிகள் 4/வது நாளாக தொடக்கம்.
இந்தோனேசியாவின் ஜாவா மாகாணம் சிரேபன் நகரில் சுண்ணாம்பு கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென கல் குவாரியில் பாறைகள் சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் குவாரியில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் 6 பேரை பத்திரமாக மீட்டனர்.
ஆனாலும், இந்த விபத்தில் ஏற்கனவே 14 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் கல் குவாரி விபேத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, குவாரி விபத்தில் மேலும் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அந்த தொழிலாளர்களை மீட்க இன்று 4வது நாளாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து நடந்து 4 நாட்கள் ஆகும் நிலையில் அந்த 6 தொழிலாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


