Idhayam Matrimony

அரியானாவில் சாலை விபத்து - 4 பேர் பலி

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      இந்தியா
Accident-1

Source: provided

சண்டிகர் : அரியானாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த சிலர் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள நீம்ஹெரா கிராமத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ள காரில் சென்றனர். பின்னர் நேற்று அதிகாலையில் குருகிராமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி ஒன்றில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில், காரில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே   பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் லாரியின் பின்னால் சிக்கிய காரை மீட்க கிரேன் வரவழைக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் இறந்தவர்களின் உடல்களை சிதைந்த வாகனத்திலிருந்து போலீசார் மீட்டனர். இறந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இறந்தவர்கள் குருகிராமைச் சேர்ந்த கவுரவ், சச்சின், கன்வர் பால் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அங்கித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து