Idhayam Matrimony

யார் அந்த சார்? என்ற கேள்வியை எழுப்புவது நீதிமன்ற அவமதிப்பு: வழக்குரைஞர் மேரி ஜெயந்தி தகவல்

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      தமிழகம்
Gnanasekaran-2025-06-02

சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டதால், யார் அந்த சார்? என இனி கேள்வி எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பு என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் மேரி ஜெயந்தி கூறியிருக்கிறார்.

நீதிமன்ற வளாகத்தில், அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஜெயந்தி பேசுகையில், ஞானசேகரனின் பின்புலத்தில் யாரும் இல்லை. சம்பவம் நடந்த போது, அவரது செல்போன் பிளைட் மோடில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டுவதற்காகவே, தானும் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்  என ஏமாற்றும் வகையில், பிளைட் மோடில் இருந்த செல்போனில், பேசுவது போல ஞானசேகரன் ஏமாற்றியிருக்கிறார்.

அவரது போனுக்கு, சம்பவத்தின்போது எந்த அழைப்பும் வரவில்லை, அவரும் எந்த அழைப்பையும் மேற்கொள்ளவில்லை என்பது செல்போன் சேவை நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், சம்பவ நேரத்தில், சம்பவ நாளன்று, ஞானசேகரனுக்கு வந்த அழைப்புகள் அனைத்தையும் ஆதாரமாக சேர்த்துள்ளனர். இது தொடர்பாக தொலைத்தொடர்பு நிபுணர் வாய்மொழி சாட்சியாகவும் நீதிமன்றத்தில் அளித்திருக்கிறார். 

எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் வகையில்தான், அவர் போனில் பேசியிருக்கிறார். எனவே, இனியும் யார் அந்த சார் என்று கேள்வி எழுப்புவது நீதிமன்ற அவமதிப்பு  என்றும், இந்த வழக்கில் யாருமே பிறழ்சாட்சியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என அரசு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து