Idhayam Matrimony

பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      தமிழகம்
CM-1-2025-06-02

சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை நடத்தப்பட்டது. அதேபோன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப். 7 முதல் 17-ஆம் தேதி வரையும், 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஏப். 8 முதல் 24-ஆம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு ஏப். 25 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் திறக்கப்பட்டன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு, திறப்புக்காக பள்ளிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டன.

 முதல் நாளில் பள்ளி வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், நலத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து