Idhayam Matrimony

அமெரிக்காவில் நடந்த இஸ்ரேல் ஆதரவு பேரணியில் மக்கள் மீது தீ வைத்து எரிக்க முயற்சி

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      உலகம்
Gaza 2024-04-15

Source: provided

நியூயார்க் : அமெரிக்காவின் கொலராடோவில், காசாவில் ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர கூடியிருந்த மக்கள் குழு மீது ஒரு நபர் திரவத்தை வீசி, அவர்கள் மீது தீயை பற்ற வைத்துள்ளார். இதில் 6 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து முகமது சப்ரி சோலிமான் எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலராடோவின் போல்டரில் காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர நடத்தப்பட்ட பேரணியின் போது, ஒரு நபர் மக்கள் மீது திரவத்தை வீசி தீவைத்துள்ளார். இந்த சம்பவத்தின்போது அவர்  பாலஸ்தீனத்தை விடுவிப்போம்" என்று கத்திக்கொண்டே சென்றார்.

இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து, உள்ளூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் என்று போல்டர் காவல்துறைத் தலைவர் ஸ்டீபன் ரெட்ஃபியர்ன் கூறினார். இதில் பாதிக்கப்பட்ட 67 முதல் 88 வயதுக்குட்பட்ட ஆறு பேரும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து