எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஸ்டாவஞ்சர் : நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் தொடரில், குகேஷுக்கு எதிராக தோல்வி அடைந்த கார்ல்சென், கோபத்தில் மேஜையில் ஓங்கி குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நார்வே கிளாசிக்கல் செஸ்...
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியன் குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), அர்ஜூன் எரிகைசி (இந்தியா) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
கார்ல்செனுக்கு அதிர்ச்சி...
இந்நிலையில், நார்வே செஸ் தொடரில் நேற்று நடந்த 6வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார். இந்த தொடரில் இரு வீரர்களும் மோதிய முதல் ஆட்டத்தில் கார்ல்சென் வெற்றி பெற்றிருந்தார். இதனால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குகேஷ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கார்ல்செனுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த தோல்வியினால் கோபமடைந்த கார்ல்சென் மேஜையில் ஓங்கி குத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குகேஷ் 3வது இடம்...
இந்த வெற்றியின் மூலம் நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் புள்ளி பட்டியலில் 8.5 புள்ளிகளுடன் குகேஷ் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேவேளை, 9.5 புள்ளிகளுடன் கார்ல்சன் 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் வாழ்த்து...
இந்நிலையில் குகேஷ்-க்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த குகேஷ்-க்கு வாழ்த்துக்கள். இந்திய சதுரங்கத்திற்கு ஒரு பெருமைமிக்க தருணம் மற்றும் சதுரங்க விளையாட்டில் மேலும் ஒரு மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளார் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


