Idhayam Matrimony

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆஸி., வீரர் மேக்ஸ்வெல் ஓய்வு

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      விளையாட்டு
Maxwell 2023-11-08

Source: provided

சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

2012  முதல்...

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு கவனம் செலுத்தும் நோக்கில், ஒருநாள் தொடரில் ஓய்வுபெறும் முடிவை எடுத்திருக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா அணிக்காக மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார். இதுவரை 149 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல், 3,990 ரன்கள் குவித்து, 77 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

கோப்பையை வெல்ல...

மேலும், 2015 மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்று, கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில், 126 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

ஓய்வு முடிவு...

இந்த நிலையில், ஓய்வு முடிவை அறிவித்துள்ள மேக்ஸ்வெல், 2025 சாம்பியன்ஸ் டிராபியின் போது இந்தியாவிடம் அரையிறுதியில் தோல்வி அடைந்தபோதே இந்த உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலிய தேர்வுக் குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லியுடன் ஆலோசனை நடத்திய மேக்ஸ்வெல், 2026 உலகக் கோப்பை தொடர்பாக பேசியுள்ளார். அதுவரை விளையாடுவேன் என நினைக்கவில்லை, ஆகையால் தன்னுடைய இடத்தை சிறந்த வீரரைக் கொண்டு நிரப்ப வேண்டிய நேரம் இது என முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, டி20 போட்டிகளில் மேக்ஸ்வெல் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து