Idhayam Matrimony

102-வது பிறந்தநாள்: சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2025      தமிழகம்
0

Source: provided

சென்னை: 102-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் 

முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் நேற்று செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினார். அவருடன் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், நிர்வாகிகள் உள்பட பலரும் கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடக்கும் செம்மொழி விழாவில் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பணியாற்றும் காவலாளிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து