எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும் என விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்காக தமிழக ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக விதிமுறைகள் இயற்றப்பட்டுக் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஆதார் எண்ணை இணைத்ததுடன் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதையடுத்து இந்த வழக்கானது நீதிபதிதகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 4-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமிர்த திவாரி, வழக்கறிஞர் அரவிந்த ஆகியோர் ஆஜராகினர்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு விதித்திருந்த நேர கட்டுப்பாடு செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


