Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: நீதிமன்றத்தை சென்றுவிடுவோம் என்ற பயத்தில் மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஒப்புதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2025      தமிழகம்
stalin 2025-01-06

Source: provided

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டத்திற்கு கோர்ட்டிற்கு சென்றுவிடுவோம் என 

பயந்து மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை போட்டியின்றி நியமனம் செய்யும் வகையில் 2 சட்டமசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனிடையே, இந்த 2 மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்தார். 

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் நேற்று செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், கருணாநிதி பிறந்த நாளை 22 இடங்களில் விழாவாக நடத்த போகிறோம். அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி சொல்லக்கூடிய வகையில், அந்த பிரசாரமும் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்தது எதிர்பார்த்ததுதான். சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம். வேறு ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து