எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் 26 பேர் கொல்லப்பட்டனர், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு பாராளுமன்றம் கூடுவது இதுவே முதல் முறை ஆகும்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறப்பு பாராளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தற்போது மழைக்கால கூட்டத்தொடருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விதிகளின் கீழ், மழைக்கால கூட்டத்தொடரின் போது அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்கலாம் என்று பாராளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை இந்த அமர்வின் முக்கிய விவாதப் புள்ளிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானமும் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


