எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஸ்பெயின் மண்ணில் வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி என்று கூறிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்வாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து சர்வதேச நாடுகளுக்குத் தெளிவாக விளக்குவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து வருகின்றன.
அதில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் ஒரு எம்.பி.க்கள் குழு இடம்பெற்றுள்ளது. இந்த குழு ஸ்பெயினுக்கு சென்று அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தது. அதன்பின்னர், அந்நாட்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பங்கேற்றார். அப்போது, இந்தியாவின் தேசிய மொழி குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கனிமொழி, வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி' என கூறினார். அவரது பேச்சை செய்தியாளர்கள் கைதட்டி வரவேற்றனர்.
இந்நிலையில், தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி பேசிய வீடியோவை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஸ்பெயின் மண்ணில், இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன். இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை - ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


