Idhayam Matrimony

ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.6 ஆயிரமாக உயர்வு: வழங்க அரசு அரசாணை வெளியீடு

புதன்கிழமை, 4 ஜூன் 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் மாநில சிவில் மற்றும் ஆசிரியர் ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால், சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் 10 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அன்றைய தினமே, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட "சி" மற்றும் "டி" பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1000 ஆக இனி உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால் சுமார் 4 இலட்சத்து 71 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசிற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் சுமார் 24 கோடி ரூபாயாக இருக்கும். எனத் தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாடு அரசு மாநில சிவில் மற்றும் ஆசிரியர் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பண்டிகை முன்பணத்தை 4,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், பண்டிகை முன்பணம் உயர்வு இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வரும். இந்த உத்தரவு வெளியிடப்பட்ட நாளுக்கு பிறகு கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு பொருந்தும். இப்பண்டிகை முன்பணமானது பத்து மாதங்களுக்கு சமமான தவணைகளில் பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து