Idhayam Matrimony

இந்தியாவை மிரட்டிய ஜெய்ஷ் தீவிரவாதி பாக்.கில் மர்ம மரணம்

புதன்கிழமை, 4 ஜூன் 2025      இந்தியா
Abdul-Aziz-2025-06-04

புதுடெல்லி, இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவை சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன் என ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஇஎம்) தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் அஜிஸ் கடந்த மாதம் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் அப்துல் அஜிஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் இதை உறுதிப்படுத்தி இருப்பதுடன், பஹவல்பூரில் அஜிஸ் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்துள்ளன. ஆனால், பாகிஸ்தான் அதிகாரிகளோ ஜேஇஎம் அமைப்போ இந்த தகவலை இதுவரை உறுதி செய்யவில்லை.

காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த மே 7-ம் தேதி துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில் பஹவல்பூரில் இருந்த ஜெஇஎம் அமைப்பின் முகாமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து