Idhayam Matrimony

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொலை

புதன்கிழமை, 4 ஜூன் 2025      இந்தியா
Gun 2023-10-05

Source: provided

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் காரில் சென்ற பா.ஜ.க. நிர்வாகிளை மர்ம நபர்கள் சுட்டதில் உயிரிழந்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் மண்டவ்வாலா மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி ரோகித் நகி. இவர் அம்மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், ரோகித் நகி கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு காரில் தனது நண்பர்களுடன் பிடல் சவுக் நகரில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர் திடீரென ரோகித் நகியின் காரை இடைமறித்தனர். பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு காரில் இருந்த ரோகித் நோக்கி சரமாரியாக சுட்டார். பின்னர், உடனடியாக பைக்கில் 2 பேரும் தப்பிச்சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரோகித்தின் நண்பர் அவரை காரிலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ரோகித்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரோகித் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த அசார் தியாகி என்ற நபரை தேடி வருகின்றனர். பெண் விவகாரத்தில் பா.ஜ.க. இளைஞரணி தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து